ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

13 குடும்பத்தினரை நடுத் தெருவுக்கு கொண்டு வந்த தாசில்தார் .

  ஒரே நாளில் பணமதிப்பிழப்பு  . ஜிஎஸ்டி ,  தூத்துக்குடி  துப்பாக்கி சூடு வரிசையில்   ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பேரில் 13 குடும்பத்தினரின்  10 கோடி மதிப்புள்ள வீடுகளை ஆகஸ்ட் 20 அன்று  ஒரே நாளில் இடித்து  நடுத் தெருவுக்கு கொண்டு  வந்துள்ளார்  கடலூர் மாவட்டத்தை சேர்ந்த  திட்டக்குடி தாசில்தார் சத்யன் .


        இந்து முன்னணி , பாமக , வாழ்வுரிமை கட்சி என அனைத்தும்  திட்டக்குடியில் முக்கிய நீர்நிலையான வெலிங்டன் நீர் தேக்கம் ,  ஏரி , பேருந்து நிலையம் , திருக்குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என  தொடர் போராட்டங்களை  நடத்தி வருகின்றன
    குளத்தின் ஒரு பக்கத்தில் பணக்காரர்களும் , அரசியல்வாதிகளும் அவர்களின்  வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன .  அதனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்   குளக்கரையில் உள்ள அடிமனை வரி கட்டினால் பட்டா கிடைக்கக் கூடிய   நத்தம் புறம்போக்கில் குடியிருக்கும்  உழைத்து சாப்பிடும் கைம்பெண்களை , பூ கட்டி விற்பவர்களை , தனி பெண்களை டார்கெட் வைத்து நடவடிக்கை எடுத்து அரசியல் கட்சிகளின்  போராட்டத்திற்கு  முடிவு கட்டியுள்ளார்கள்  . 
       
ஆக்கிரமிப்பு அகற்றதிற்கு அரசு பல படிகளை வைத்துள்ளது . நான்கு வழி  சாலை , நெடுஞ்சாலை , கடைத்  தெரு , நீர் நிலைகள் என வரிசைக் கிரகமாக பிரித்து வைத்துள்ளது , இந்த வரிசைக் கணக்கில்  வராத எப்போதும் போக்குவரத்தே இல்லாத 40 அடி அகலம் கொண்ட மண்சாலையில் இவர்கள் குடியிருந்து வருகிறார்கள் .  இவ்விடம்   அரசு FM ஸ்கெட்ச்சில்  அடிமனை வரி கட்டினால் பட்டாவாக மாற கூடிய  நத்தம் புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது .  யாரோ சிலரின் தனி லாபத்திற்காக திட்டக்குடி தாசில்தார் சத்யன் இவைகளை  திருக்குள ஆக்கிரமிப்பு எனும் பெயரில் அகற்றியுள்ளார் . 
    
   தாசில்தார் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் போது அரசு விதிகளான அறிவித்தல் ,  அளவையிட்டு மார்க் செய்தல் , அவகாசம்    கொடுத்தல் என எவ்வித விதிகளையும் கடை பிடித்திடாமல் காவல் துறையினர் , தீயணைப்பு , இந்து அற நிலையத துறை , வருவாய்த் துறை என 300 பேர்களுக்கு மேல் வைத்துக் கொண்டு இந்நடவடிக்கையினை எடுத்துள்ளார்.
   
  இதில் உச்ச கட்டம் என்னவென்றால் இத்தெருவின் நடுவில் 2 கோடி மதிப்புள்ள 3 மாடிக் கட்டிடம் இந்து அற நிலையத் துறை அலுவலக உபயோகங்களுக்காக  பக்தர் ஒருவரால் காணிக்கையாக கொடுக்கப் பட்டது . அதையும் சுத்தமாக இடித்து தள்ளி விட்டார்கள் . அது கோவிலுக்கு சொந்தமானது அக்கோவிலின் கரையில் அது உள்ளது . அதையும் ஆக்கிரமிப்பு என்று காரணம் சொல்லி இடித்தார்கள் . இது இந்து அறநிலைய துறையின் கீழ் வருகிறதா அல்லது வருவாய் துறை கீழ் வந்ததால் இடித்தார்களா எனவும் தெரியவில்லை . இக்கட்டிடத்தை ஜேசிபி யால் இடிக்க முடியவில்லை . ஹிட்டாச்சி எனும் மலைகளை பிளக்கக் கூடிய  வாகனத்தை கொண்டு வந்து இடித்தார்கள் . 


மற்றவர்களுக்கு  இவர்கள் சொன்ன காரணங்கள் . குளக்கரையில் இருப்பவர்கள் குளத்தை ஆக்கிரமித்துள்ளார்கள் என்று பொய்யாக குற்றம் சாட்டி ஒரு தெருவையே  இடித்து விட்டார்கள்  .

 இதனால் பாதிக்கப்பட்ட்து யார் என்றால் ஆண் துணை இல்லாமல் தனியாக வசிக்கும்   கைம்பெண்கள்  , வயதான பெண்மணிகள் மட்டுமே .  இப்பெண்களுக்கு இடிக்கபோகும் இடத்திற்கு  எவ்வித அவகாசமும் கொடுக்காமல் ஜேசிபி கொண்டு வந்து வேலையை தொடர்ந்தனர் . . ஜாமான்கள் வீதியில் வைக்கப் பட்டன . பலருக்கு அடுத்த வேலை எங்கே போவது என்று தெரியாமல் ஒரு நாள் முழுதும்  தெருவிலேயே கிடந்தனர். மேலும் எங்கும் இல்லாத கொடுமையாக ஜேசிபி  இடிக்க இடிக்க பொருள்கள் பீரோக்கள் கீழே விழுந்து அதை புகையின் நடுவே எடுத்து தெருவில் வைக்கும் நிலையும்   தொடந்தது . இசசம்பவத்தில் ஒருவருக்கு  கையொடிந்தது ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார் .அனைத்திற்கும் நடுவில் வீடு இடிக்கும் சம்பவம் சுறுசுறுப்பாக நிகழ்ந்தது .  


அடிமனை வரி கட்டினால்  பட்டா  பெற்று கவுரவமாக வாழ  வேண்டியவர்களை அங்கு கிரவுண்ட் 1 கோடிக்கு மேல் போகிறது என்னும் காரணத்திற்காக எவ்வித அரசு விதிகளையும் கடை பிடிக்காமல் எவ்வித காலஅளவும் கொடுக்காமல் அவர்கள் ஜாமான்களைக் கூட எடுக்க விடாமல் செய்து நடுத்தெருவுக்கு விரட்டியது என்ன நியாயம் ???

 இதனால் இவர்கள் அல்லது அரசு , அல்லது பொதுமக்கள் அடைந்த பலன்கள் தான் என்ன ????காலம் தான் பதில் சொல்லிட வேண்டும் .

 பின்குறிப்பு :- சுதந்தரத்திற்கு பின் வந்த புதுப்பணக்காரர்களுக்கு மட்டும் இந்த செய்தி  புறம்போக்கை எடுத்ததாக தெரிந்திடும் . 50 ஆண்டுகளுக்கு மேலான அணைத்து சொத்துக்களும் பீம் நோட்டீஸ் என்னும் வகையிலியேயே இருந்திடும் எவ்வகை பத்திரமும் இருந்திடாது . பட்டா அடங்கல் சிட்டா என அனைத்தும் வளர்ந்துவரும் நகரங்களுக்கு மட்டுமே பொருந்திடும் .கிராமங்களில் பலருக்கு இருந்திடாது .அவர்கள் வங்கி கடன் பக்கமும் போகாதவர்கள் . பழமையை காப்பவர்கள் . அவர்களை சரியாக தாக்கியுள்ளனர்